யாதும்

உண்மைக்கு அழிவில்லை.

தமிழும் கன்னடமும்

காவிரி என்றாலும் ஒக்கேனக்கல் என்றாலும்
தமிழருக்கும் கன்னடருக்கும் கருத்து வேறுபாடுதான் ..

ஆனால் பேச்சு உச்சரிப்பில் அவ்வளவு ஒற்றுமை ...
சிலவற்றை பாருங்களேன்...........

அப்டியா ------அவுதா

சரி -----சரி

கொடு ---- கொடி

என்னப்பா இது -----ஏனப்பா இது

பேஜார் -----பேஜார்

கேட்டுவிட்டு -----கேல்பிட்டு

இன்னும் பல வார்த்தைகள் ......

மொழிகளே ஒற்றுமையாக இருக்கும் போது
மொழி வெறியர்கள் இருக்கிறார்கள் என்று
தெரிந்தால் மொழி எவ்வளவு வருத்தப்படும்....

பெங்களூர் வீதிகளில் நாம் நடந்து செல்லும் போது
நம் காதுகளில் தேனாய் பாய்கிறது தமிழ் .......

என்ன ஒன்று சென்னை தமிழ் மதுரை தமிழ்
போல் இது பெங்களூர் தமிழ் ....
உதாரணமாக ஒரு ஆட்டோ ஓட்டுனர் சொன்னது ...
"சுத்தி போய்ட்டு வரணும் சார்"

ஈரம் இல்லையே ஈழத்தை கண்டு....

சரித்திர காலத்தில் காக்கை வன்னியன் காட்டிக்கொடுத்தான்....
soft ware காலத்தில் பெயருக்கு பொருத்தமில்லாத கருணா.....

உலக தமிழர்கள் என்று மார்தட்டிக்கொள்ளும் நாம் .....
தாயகம் திரும்பும் தமிழர்ளை பெயர் வைத்துள்ளோம் அகதிகள் என்று....

தமிழர்களை கொன்று குவிப்பதை பார்த்துக்கொண்டு.....
பயனில்லாத உண்ணா விரதங்களும் போராட்டங்களும்
நடத்திக்கொண்டு இருக்கின்றோம் .....

இன்றுவரை தூய தமிழ் பேசுவர்களை தினம் தினம் இழந்து கொண்டே .....
செய்வதரியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றோம்
தங்லீஷ் பேசும் நாம்.....

இணையம் மெல்ல சாகும் தமிழை மீட்டது ...
ஆனால் இலங்கையோ இணையத்துக்கு சவால் விட்டுக்கொண்டு
அழிக்கிறது தமிழை.....

அழகு தமிழ் அழிவதை கண்டு பதருகிற‌து நெஞ்சம்...
பார்த்துக்கொண்டு இருப்பதை தவிர வேருவழியில்லை என்றபோதுதான் ஒப்புக்கொள்ள முடியவில்லை கொஞ்சம்....

சில நேரங்களில் நானும் நாத்திகனாக மாறிவிடுகிறேன்.....
இதையெல்லாம் பார்துக்கொண்டு கடவுள் இருக்கின்றானா என்று....







பத்திரிக்கை செய்தி - வாட்டள் நாகராஜ் 'டெபாசிட்' இழந்தார்

தமிழர்களை எதிர்த்து கர்னாடக மக்களுக்காக குரல் கொடுத்த வாட்டள் நாகராஜின் பலத்தை இப்போதுதான் அறிந்துகொண்டேன். நானும் அவர் பெரிய அரசியல் கட்சி தலைவர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ந‌டிகர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது சரத்குமார் வாட்டள் நாகராஜ் பற்றி 15 நிமிடம் பேசி இருப்பார். அதன் பின் பேச வந்த ரஜினி அவர்கள் " வாட்டள் நாகராஜலாம் விடுங்க நாம பெரிய leveல் பேசுவோம்" என்றார். பத்திரிக்கையில் டெபாசிட் இழந்த செய்தியை பார்த்த போது ரஜினி அவர்கள் சொன்னதுதான் நினைவில் வந்தது.

Labels:

குட்டி குட்டி வரிகள்



முகம்
மனதிற்கு ஏற்ப மாறும்

மந்திரவாத சந்தர்ப்பவாதி

தலை முடி
நல்லவர்களுக்கும் தலைக்கன‌ம் கொடுக்கிறாய்

மாதா மாதம் உன்னை வெட்டினாலும் !

key board
விரல்களிடம் அடி வாங்கும்

பாவப்பட்ட ஜென்மம்.

ups
computer ஐ மின்சாரம் கைவிட்டாலும்

இதன் சம்சாரம் ups கைவிடாது.

ரஜினி காந்த்
இரும்பை ஈர்க்கும் காந்தம் இருக்க‌

பல கோடி இதயத்தை ஈர்த்த காந்தம்!

கடவுள்
மனிதர்களுக்கு தன் நம்பிக்கை குறைந்தாலும்
உன் நம்பிக்கை குறையாது சாட்சி
இல்லாமல் எதையும் நம்பாதவரையும்
காட்சி கொடுக்கமலே நம்ப வைத்துக்கொண்டிருக்கிறாய்

கடல் அலை
எப்போதும் முன் வைத்த காலை பின் வைத்து
வந்து வந்து செல்கிறாய்...
உள்ளே வர‌ யோசிக்கிறாயோ என்று நினைத்தால்
திடீர் என்று சுனாமியாய் வந்து தூக்கி சென்றாய் எல்லோரயும்..
யோசித்தது இதற்கு தானோ!


Labels:

கோடை


கோடையே நீ கொடுத்த கொடை விடுமுறை...
நீ கொடுத்த கொடுமை அக்னி நட்சத்திரம்...

உன்னால்தான் சுற்றினோம் ஊரெங்கும்...
சூரியனை விட்டு சுட செய்தாய் எங்கள் உடம்பெங்கும்...

ஊரெங்கும் தண்ணீர் பந்தல் அமைத்து எங்கள் தாகத்தை தனித்தாய்...
வியர்வை வரசெய்து எங்கள் உடம்பெல்லாம் நனைத்தாய்...

உன்னால்தான் நாங்கள் கண்டோம் கானல் நீரை...
சில மாதங்களில் நீயும் மறைந்தாய் கானல் நீராய்...

நாங்கள்
இந்த உலகிற்கு வழிபோக்கர்கள் ...
நீ எங்கள் வாழ்கையின் வருடம்தோறும் வரும் வழிபோக்கன் ...

Labels:

இரண்டு விரல்களின் நடுவில் ஒற்றை குழல்


புகை பிடிப்பதால் வரும் தீமைகள் பற்றிய சில வரிகள்


ஒரு நாளுக்கு இர‌ண்டு முறையாவது நீ வேண்டுமாம் எங்க‌ள் மானிட‌ர்களுக்கு.....
புகையே என்ன புகை போட்டயோ அவர்களுக்கு...

எங்க‌ள் மானிட‌ர்க‌ளின் விர‌ல்க‌ளுக்கு இடையில் எழுதுகோலும் தான் இருக்கிற‌து...
அவ‌ர்க‌ளின் வாழ்கையை சீரான‌ முறையில் ந‌ட‌த்த‌...

சில‌ நிமிட‌ங்க‌லே அவ‌ர்களின் விர‌ல்க‌ளில் இருந்து கொண்டு ...
சீர‌ழிக்க‌ராய் அவ‌ர்க‌ளின் ப‌ல‌வ‌ருட‌ வாழ்கையை ...

நெஞ்சை நிமிர்தி வீரர்களாக‌ நிற்கும் எங்க‌ள் வாலிப‌ர்க‌ள்...
கோழைகளாக பெட்டிக்க‌டை பின்னால் ப‌துங்குவ‌தும் உன்னால்தான்...

இர‌ண்ட‌ரை ரூபாயில் உன்னை வாங்குகிறார்க‌ள்...
அவ‌ர்களுக்கு தெறிய‌வில்லை நீ ஏழ‌ரை என்று...

நெருப்புதான் உன்னை எரிக்கிற‌து...
ஆனால் உனக்கு சுடவில்லை போலும்...

மானிடர்கள் த‌ம் அடிப்ப‌தை பார்த்துக்கொண்டு ...
த‌ம் பிடித்துக்கொண்டு (பொருமையாக‌) இருக்கிறோம் செய்வதறியாமல்...


இரண்டு வார்தைகளால் உல‌கை அறிந்தோம்

தாயும் தந்தையும்தான்...
வேறென்ன சொல்வதற்க்கு

உல‌‌க‌த்தை எனக்கு காட்டினீர்க‌ள்...
நான் கேட்காம‌லே என‌க்கு வேண்டிய‌தை செய்தீர்க‌ள்...
உங்க‌ள் ச‌க்திக்கு மீறி...

எனக்கு ஒரு பிர‌ச்ச‌னை என்றால்
கண்ணீர் வ‌ருகிறது உங்‌க‌ள் க‌ண்க‌ளில்...

த‌டுமாறும் போது தோள் கொடுத்தீர்க‌ள்...
த‌ட‌ம் மாறும் போது திருத்தி திசை திருப்பினீர்க‌ள்...

த‌ண்ணீராய் செல‌வு செய்தீர்கள் நாங்கள் ப‌டிப்ப‌த‌ற்கு...
தண்ணீர் தொட்டியை போல் சேமித்து வைத்துள்ளோம் எங்கள் மனதில்...

ஆயிரம் கடவுள்கள் இருந்தாலும்......
கண்ணால் கண்ட தெய்வம் இவ்விருவர்தானே...

இரண்டு என்றவுடன் முதலில் நியாபகம் வருவது... எனக்கு அறிமுகம் கொடுத்த இவ்விரு முகம் தானே...

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாம் ஆண்டு விழாவுக்கான இடுகை

சுமையான நினைவுகள்

ஒரு வருடத்திற்கு முன்பு நான் பாண்டிச்சேரியில் வேலை செய்த நேரம்...பாண்டிச்சேரியில் இருந்து கடலூருக்கு 1 மணி நேரம் ப்ரயானம். ருபாய் 6.50 பெருந்து கட்டணம். ஒரு நாள் பாண்டிச்சேரி பேருந்து நிலையத்தில் கடலூர் பேருந்துக்காக நின்ருகொண்டிருந்தேன்.
அப்பொழுது ஒரு ஆல் நான் கடலூர் போனும், காசுலாம் தொலைஞ்சு போச்சு. பேருந்துக்கு காசு கேட்டார். நான் என்கிட்ட இல்லைங்க நு பொய் சொல்லிவிட்டு... அருகில் இருந்த என் நண்பனிடம் "ஒரு நாளைக்கு நாம இது மாதிரி எத்தனை பேர பாத்து இருக்கோம்லனு" சொல்லிட்டு இருந்தேன்.
அருகில் இருந்த ஒருவரிடமும் அவர் அதே கதையை சொல்லிக்கொண்டு இருந்தார். கடலூர் பேருந்தும் வந்தது.அருகில் இருந்தவர் காசில்லாமல் நின்ருகொண்டிருந்த அந்த நன்பனை அழைத்துக்கொண்டு பேருந்தில் ஏறி அடித்து புடித்து இடம் புடித்தார்.நடத்துனரிடம் 2 கடலூர் என்று டிக்கெட் வாங்கினார். உத‌வி செய்த அந்த நபரை பார்த்து நமக்கு இந்த அறிவு இல்லாமல் போனதே என்ற வருத்தம். காசாக கையில் கொடுத்தல் தானே ப்ரச்சனை. தன்னுடன் அமர வைத்து டிக்கெட் எடுத்த அந்த நன்பணின் பெருந்தன்மை என்னை திக்குமுக்காட செய்தது.
தினமும் பத்து பொய் சொல்லும் ஆட்களை பார்க்கும் போது உன்மையான நல்லவர்களையும் தப்பாதான் பார்கிறோம். அன்று இரவு இருகிய மனத்துடன் யோசிக்கும் போது நாமும் வெளி ஊர்கலுக்கு சென்று பணத்தை தொலைத்து யாரிடமாவது உத‌வி கேட்டு இல்லை என்று சொல்லிவிட்டல் என்னாவது என்று யோசித்தேன்... நெஞ்ஞம் பதைபதைத்தது... சூழ்நிலையால் செய்த தவறை நினைத்தால் சுமையான நினைவுகலாகத்தான் இருக்கின்றன...

நான் ரசித்தவை

கலைஞர் அவர்கள் அண்ணாதுரை அவர்கள் இறந்தவுடன் பதவி ஏர்க்கும் போது சொன்னது "சௌமியன் போய் சாதாரணன் வந்திட்டேன்" அதன் பொருள் சௌமிய வருடத்தில் அண்ணாதுரை அவர்கள் இறந்ததையும் சாதாரண வருடத்தில் தான் பதவிக்கு வந்ததையும் இவ்வளவு அழகாகவும் தன் அடக்கத்துடனும் கூறியதாக பிறர் கூற கேட்டறிந்தேன். அதை நான் மிகவும் ரசித்தேன்.

ரஜினிகாந்த் அவர்கள் சிவாஜி வெற்றி விழாவில் கலைஞர் அவர்களை பற்றி பேசியதை நான் மிகவும் ரசித்தேன். " சில பேருக்கு கடவுல புடிக்காது ஆனா கடவுலுக்கு அவங்கல‌ புடிக்குமே "

திசை மாறும் தமிழ்


அமர்களம் என்னும் வார்த்தை நம் அனண‌வரும் பயன்படுத்தும் வார்த்தை.அமர்களம் என்னும் வார்த்தைக்கு உண்மை பொருள் போர்களம்.அமர் என்பது போர் என்பதை குறிக்கும்.விழா எப்படி நடந்தது என்றால் அமர்களமாக என்று சொல்கிரோம்.அப்புறம் ரகலையாக விழா நடந்தது என்றும் சொல்கிறோம். இவ்வாராக தமிழ் திசை மாறி பயனிக்கிறது.

ஊழல் பெரிச்சாளிகளை ஒழிக்க....

ஊழல் பெரிச்சாளிகளை ஒழிக்க ஒரு யோசனை... லஞ்ச ஒழிப்பு துறை மூலமாக ஒவ்வொரு மாதமும் மாவட்ட வாரியாக ஒரு கூட்டம் நடத்த வேண்டும். லஞ்சம் வாங்காதீங்கனு வாயால சொன்னா அவங்களால கேக்க முடியாது. அவங்களுக்கு புது விதமான பயத்தை ஏர்படுத்தனும்.
1. லஞ்சம் அதிகமா வாங்கின யாராவது ஒருத்தரோட குழந்தைகள் குட்டிச்செவுரா போன குடும்பத்தை படம் எடுத்து அதை கூட்டத்தில் அனைவருக்கும் போட்டு கட்ட வேண்டும்.
2. லஞ்சம் வாங்கி காவல் துறையிடம் மாட்டிய ஒருவர் படும் அவமானங்கள் அவர் குடும்பம் இருக்கும் நிலை , அக்கம் பக்கம் வீட்டார் அவர்களை பார்க்கும் பார்வை அனைத்தையும் ஒலி மற்றும் ஒளி மூலம் மனதை உருக்கும் விதமாக படம் எடுத்து அவர்களுக்கு போட்டு காட்ட வேண்டும்.( பாலு மஹேந்திர , பாலா , அமீர் இவர்களை பயன்படுத்தலாம் ! )
லஞ்சம் வாங்கினா புள்ளகுட்டி தறுதலையா போயிடும்னு மிரட்டனும். குடும்பத்துக்காக பலர் இந்த தப்பை செய்யறாங்க .இவங்கள அழிஞ்ச குடும்பத்தை காட்டித்தான் மிரட்டனும்.
இதை ஏன் மாதந்தோரும்னு சொன்னேன்னா நம்ம மக்களுக்கு மறதி அதிகம். அவங்களை லஞ்சம் வாங்கினா வரும் விளைவுகளை நினைவுபடுத்திட்டே இருக்கணும்.
லஞ்ச ஒழிப்பு துறைக்கு வேற வேலை இல்லையானு கேக்கலாம் ஆனா நீதி வழங்க வேண்டிய நீதி துறையே இரண்டு தரப்புகளுக்கும் சமரசம் செய்வது இல்லையா? அதுபோலத்தான் இதுவும்.
இதன் மூலமா ஊழலை ஒழிக்க முடிலனாலும் குறைக்கவாவது முடியும். இந்த பெரிச்சளிகளை புடிக்க(திருத்த ) இதுதான் நல்ல மசால் வடை என்று நினைக்கிறேன்.

ஞாநி சொன்ன யோசனை

ஞாநி என்னும் பத்திரிக்கையாளர் , விமர்சகரை தமிழ் நாட்டில் அனைவரும் அறிவோம். அவர் ஒரு முறை பேட்டியில் சொன்னது... அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாகவும் ஒழுங்காகவும் பாடம் நடத்த ஒரு யோசனை சொன்னார். அரசாங்க பள்ளிகளில் வேலை செய்யும் ஒவ்வொரு ஆசிரியரும் கட்டாயமாக தனது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்று அரசு சட்டம் போட்டால் ஒரே இரவில் அனைத்து பள்ளிகளுக்கும் நல்ல கல்வி கிடைக்கும் என்றார். ஒழுங்காக பாடம் நடதாதவர்களுக்கு இதை கேட்டவுடன் கோவம் வந்து இருக்கலாம். ஆனால் அவர் கூறுவது முற்றிலும் உண்மை. ஞானயும் கூட சில நேரங்களில் ஒரு தலை பட்சமாக நடக்கிறார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் பேசும் போது 2007 இல் எனக்கு புடிக்காத படம் சிவாஜி மற்றும் பருத்தி வீரன் என்றார். தமிழ் நாடே பார்த்து ரசித்த படத்தை ஏன் இப்படி விமர்சிக்கறார் என்று தெரியவில்லை.

சென்ற இடமெல்லாம் சிறப்பு

கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு தான். 1980 களில் சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு interview செல்வதையே வேலையாக கொண்டு இருந்தார்கள்.அப்பொழுது சென்ற இடமெங்கும் செருப்பு தான்ஆனால் இப்பொழுதோ வேலைக்கு பஞ்சமில்லை திறமை இருந்தால். ஏட்டு சுரக்கைகளாக இருப்பதில் பிரயோஜனம் இல்லை. வேலை கொட்டி கிடப்பதற்கு தெருவுக்கு தெரு கன்சல்டன்சி இருப்பது உறுதி செய்கிறது.

என்ன கொடுமைங்க !

நான் பார்த்த ருசிகரமான சம்பவத்தை தான் உங்களுடன் பகிர்கிறேன். நண்பர் ஒருவர் வீட்டிற்கு வரும் சிறு வியாபாரிகளிடம் ஒரு ரூபாய்க்கும் ஐம்பது பைசாக்கும் நிறைய நேரம் வாக்குவாதம் செய்வார்.அவர் கம்ப்யூட்டர் கொஞ்சம் பழுது ஆனது. அதை பார்க்க வந்த ஒருவர் ஐந்து நிமிடம் வேலை முடித்து விட்டு 150 ரூபாய் சர்வீஸ் சார்ஜ் என்றார்.நண்பரும் உடனே ஓகே சார்னுபணத்தை கொடுத்தார். வெய்யலில் சைக்கிள் ல வரும் சில்லறை வியாபாரியிடம் சில்ரதனமா நடப்பது சரியா? என்ன கொடுமைங்க இது !

சமீபா காலமாக..................


சமீப காலமாக அனைத்து வார பத்திரிக்கைகளும் ரஜினி பெயரை சொல்லியே தனது விற்பனையை அதிகப்படுதிக்கொல்கின்றன. பெட்டி கடைகள் எங்கும் ரஜினி முகம் போட்டு படங்கள் தொங்குகின்றன.விற்பனை அதிகரிப்பதால் மட்டுமே அவர்கள் இதில் ஈடுபடுகிறார்கள் என்பது என் கருத்து. ரஜினியின் பெயரை சொல்லி சம்பாதிக்கும் சில பத்திரிக்கைகள் உண்மைக்கு மாறான தகவல்கள் தராமல் இருந்தால் சரி.( திரு சோ அவர்கள் ஆறில் இருந்து அறுபது வரை படத்தில் கூறியது நினைவுக்கு வருகிறது ......... உண்மைய எழுதினா பதிரிகைய மூடிட்டு போக வேண்டியதுதான் .......)
table width="133" border="0" cellspacing="0" cellpadding="3">html hit counter code html hit counter